தாயின் வலி

புள்ள ஒன்னு இங்க இல்ல
கொடுத்தா என்ன கொறஞ்சிடுவ யென
கேட்காத கோவில் இல்ல
வேண்டாத சாமி இல்ல
நல்லதுக்கு நான் போனா
தள்ளி நின்னு பாத்துட்டு போ
புள்ள பூச்சி இல்லாதவ
பொட்டு வைக்க வந்துட்டியா ............?
நாசுக்கா சொன்னாங்க
நான்நோக கொன்னாங்க
பசுமாடு கன்னு போட
எட்டி நின்னு பாக்கறப்ப
ஏக்கப்பட்டு நெஞ்சி அழும்
கண்ணு வழி ரத்தம் வரும் ....................
ஏத்தி வச்ச நெய் விளக்கோ
என் புருஷன் கை விலக்கோ
எப்படியோ நீ வந்த
புது ஜென்மம் தான் தந்த..................
ஒத்த புள்ள வந்து புட்டான்
என் கஷ்டம் எல்லாம் தீத்து புட்டான்
இனி குத்தம் சொல்ல யாரும் இல்ல
தலை நிமிந்தன் ஊருக்குள்ள
நீ இஷ்ட பட்ட அத்தனையும்
வாங்கி தந்தேன் என் ராசா
நெஞ்சுக்குள்ள பத்துரமா
பூட்டி வச்சேன் மகராசா
உன் சிரிப்ப பாத்து பாத்து
நான் சிரிச்சேன் என் ராசா
சிறுக்கி மக கூப்பிட்டானு
நீ போயிட்டியே ஏன் ராசா ............?