ஆ - பசு

தமிழ்ப்புலவர் : ஏனப்பா...தம்பி...இங்கு பசும்பால் எங்கு கிடைக்கும்?


நம்மாளு : அதுக்கு ரொம்ப தூரம் நடக்கணுமே....!


தமிழ்ப்புலவர் : இல்லையே.... அருகிலேயே கிடைக்கும் என்று வீட்டில் சொன்னார்களே....????


நம்மாளு : அதென்னமோ தெரியாது...! பக்கத்துல "ஆவின்" பால்தான் கிடைக்கும்!

தமிழ்ப்புலவர் : "ஆ"வின் பால்.....! அதைத்தானப்பா கேட்கிறேன்!!

நம்மாளு : அதைத்தான் கேட்டீங்களா...?அப்புறம் ஏன் பசும்பால்னு சொன்னீங்க? ஆவின் பால்னு கேட்க வேண்டியதுதானே...?

தமிழ்ப்புலவர் : இரண்டும் ஒன்று தானப்பா!!!

நம்மாளு : அடாடாடா..... உலகம் தெரியாத ஆளா இருக்கீகளேயா....! ஆவின் பால்னா பாக்கெட்ல
தருவாங்க! பசும்பால்னா கறந்து சொம்புல தருவாங்க..!இது கூட தெரியாம இருக்கீங்க...!!

(தமிழ்ப்புலவர் நொந்தவராய் மனதிற்குள்ளேயே.....)ம்ஹூம்....தூய தமிழில் பெயர் வைத்தும் அதன் பொருள் அறியாமலேயே விளக்கம் சொல்லும் மானிடர்களால் தமிழின் நிலையை என் சொல்வேன் பாரதியே...!!

எழுதியவர் : உமர் ஷெரிப் (5-Jun-14, 1:48 pm)
பார்வை : 258

சிறந்த நகைச்சுவைகள்

மேலே