வாயாடி தேவதைMano Red

துயில் கொள்ளும் நேரம்
துன்பத்தை நீ விலை பேசாதே,
வாக்குவாதம் செய்தால்
வதம் செய்து அழித்துவிடுவேன்.!

இனியொரு முறை
இன்னல் நீ தந்தால்,
பூச்சூடிய உன் தலையில்
பூகம்பம் வெடிப்பேன்..!!

தினமும் என்னிடத்தில்
திமிரு கொண்டு நீ பேசுகிறாய்,
இக்கணம் கூறுகிறேன்
இரக்கமின்றி கொய்துவிடுவேன்..!

வார்த்தைகள் வைத்து
வேடிக்கை நீ காட்டாதே,
கொஞ்சல் மொழிக்கெல்லாம்
கொஞ்சமும் அடி பணியேன்..!!

திகட்ட திகட்ட என்னை
திட்டி நீ வதைக்கிறாய்,
என் பார்வை ஒன்று போதும்
எரித்து சாம்பலாக்கி விடுவேன்..!!

பொறுமையாக இருக்கு என்னை
போருக்கு நீ அழைக்கிறாய்,
அமைதியாக நான் இருப்பதால்
அடங்கிப் போக மாட்டேன்.!

வாயாடி நீ வாய் பேசியே
வம்புக்கு இழுக்கிறாய்,
உனக்கு என்ன தந்தால்
உம்மென்று இருப்பாய்..!!

அவ்வளவு தான்
என் கோபம் தீர்ந்தது,
எப்படியும் இறுதியில்
தோற்கப் போவது நான் தான்
தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்..!!

எழுதியவர் : மனோ ரெட் (6-Jun-14, 8:15 am)
பார்வை : 513

மேலே