நீ மட்டும்தானடி 555

என்னவளே...

நான் பார்த்து ரசிக்க
எத்தனையோ
விண்மீன்கள் விண்ணில்...

நான் படிக்க எத்தனையோ
கல்லூரிகள் என்னருகில்...

நான் வழி பட செல்ல
எத்தனையோ கோவில்கள்...

நான் பின்பற்ற எ
எத்தனையோ மதங்கள்...

நான் ரசித்து செல்ல
நந்தவனத்தில்...

எத்தனையோ
மலர் செடிகள்...

என்னுடன் நட்பு கொள்ள
எத்தனையோ நண்பர்கள்...

நான் காதல் கொள்ளவும்
சேர்ந்து வாழவும்...

இம்மண்ணில் நீ மட்டும்
தானடி இருகிறாய்...

என் காதலே உனக்காக
காத்திருக்கிறேன்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (6-Jun-14, 4:19 pm)
பார்வை : 178

மேலே