நதியின் வானம்

நான்
யாரென்று தெரியவில்லை
தெரியவும் வேண்டியதில்லை
தெரிந்தாலும் ஒன்றுமில்லை
பொதுவானவை எதுவும்
தனியானவை ஆகிறது,
எதுவானாலும் அது
எனதாகி விடுவதால்,
நான் யாரென்று
தேடுவதில்லை....
தேடினாலும் கிடைப்பதில்லை,
கிடைத்தாலும்
தீர்வதில்லை....
தீர்வது- பார்ப்பது...
பார்ப்பது- கிடப்பது.....
மாற்றுச் சிந்தனையின்
மடியில் குருதி வழியும்
மாந்தரீகம்,
மயானம் சுமந்து,
கோருவது
ஒரு தீர்வைத்தான்....
தீர்ந்தே கிடப்பதால்
கிடைக்காமல் இருக்கிறேன்....
இருக்கிறேன் என்பதே
நான் ஆவது....
நான் வேண்டாம்
என்பதில்
தெரியாமல் கிடைக்கிறது
ஒன்றுமில்லை என்றொரு
நீண்ட நதி....
நதியின் மூலம்
துளி ஒன்று...
அது நானில்லை,
யாரென்றும் தெரியவில்லை....
தெரியாமலே போவது தான்
நதியின் வானம்....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (6-Jun-14, 8:50 pm)
Tanglish : nadiyin vaanam
பார்வை : 867

மேலே