எனக்கு வரமா வந்தவனே, இப்ப மரமா கெடக்குறியே பாகம் - 2

தாய் கண்ணீர் விட்டாள், தகப்பன்?...
......குடியை விட்டான்!
(பாகங்கள் நான்கில் இரண்டாவது)

உங்கப்பன் குடிகாரன்தான், ஆனா, பொஞ்சாதிய ஒருபோதும் அடிச்சதில்ல,
பொணத்தோடு பொணமா Mortuary-ல உக்கார முடியாம குடிச்சாரு

"ராவெல்லா பொணங்களோட இருக்கணும்னா, 'ரா'-வடிச்சாதாண்டி முடியுது!
நம்ம புள்ள சாபுட்டானா - கழி கிண்டி கறி போட்டியா?
எம்புள்ள தூங்குறானா - கொசு வத்தி சுருள் கொளுத்தி வெச்சியா?"-ன்னு
மறுநா காலையில சாப்படரப்பொ, கேட்டு கேட்டு நெஞ்ச பெசயராரு!

"நீங்க குடிக்கிற 'சரக்கு'க்கு, உங்க Liver-ஏ ஊறுகாயாச்சு!
நம்ம Mortuary-யிலேயே பணத்த கட்டிட்டு, அப்புறம் குடிக்க போங்க!"-ன்னு

உசிர கிள்ளி டாக்டர் சொல்ல, தம் புள்ள பெரியாளா வர்ற வரைக்கும்
உசிரு கூட்ல தங்கனுமேன்னு, கவர்மண்ட்டு உத்தியோகத்த விட்டாரு உங்கப்பா!

அவன் இவன் கால்ல விழுந்து, அவன் இவன் கையில கொடுத்து, கடைசியா
"கருப்புராயன் துணை" யோட மணல் லாரி ஓட்ட உக்காந்தாரே!

இப்படி எமனுக்காக பயபடாம, தம்மவனுக்காக குடிய விட்டாரே
அப்படி வரமா வந்தவனே, இப்ப மரமா கெடக்குறியே!?

எழுதியவர் : வைரன் (7-Jun-14, 10:30 am)
பார்வை : 166

மேலே