அறியாமை அறிவுதானே

​சிறைக் குள்ளே
நீ ஏன் தங்கியுள்ளாய்...!

அறைக் கதவு முழுவதும்
திறந்துள்ள போது ?

முக்கோணப் பயத்தில்
முடங்காது நீ வெளிச் செல்...!

சிந்தித்து
மௌனமாய் வாழ்ந்திடு...!

இரு கண்களை மூடிக் கொள்
மறு கண்ணால் நீ பார்த்திட...!

கரங்களை விரித்திடு
​கைகளைக் குலுக்க வரும் போது...!

இந்த வட்டத்தில்
நீ வந்து உட்கார்...!

ஓநாய் போல்
நடிப்பதைத் தவிர்த்திடு...!

ஆட்டிடையன் பரிவு
உள்ளத்தில் நிரம்புவதை உணர்ந்திடு...!

எழுதியவர் : லெத்தீப் (7-Jun-14, 10:32 am)
பார்வை : 169

மேலே