இவளல்லவோ

காத்திருந்தவன் காதலியை
நேற்று வந்தவன் தள்ளிட்டு
போன கதையானதே இங்கே...

லாரியிலும் பேருந்திலும்
ஸ்டெப்னி இருக்கும் போது
எனக்கு மட்டும்
ஏன் இருக்கக் கூடாது என்கிறது
இளம் பெண்ணின் வயது... சரி ...

உண்மையாய்
உன்னை காதலிக்கும்
ஒருவனை காதலித்தால்
உன் வாழ்க்கை அவனோடு...
ஜாலிக்காக உன்னை
சுற்றும் ஒருவனை
விரும்பினால் உன் வாழ்க்கை
தெருவோடு...

வாழ்வில் எந்த விசயத்திலும்
அது இல்லைஎன்றால்
இது என்று
ஆப்சன்ஸ் இருக்கலாம்
ஆனால்
காதலில் மட்டும்
அவன் இல்லை என்றால்
இவன் என்ற ஆப்சன்ஸ்
வந்து விட்டால்
எவன் வேண்டுமானாலும்
கைவைக்கும் பொம்மையாய்
ஆகிவிடும் உன் வாழ்க்கை...

இதையெல்லாம்
தெரிந்தும் , தெரியாமல்
தன் காதலன்
பின்னாலே இன்னொருவன்
கைபிடிக்கும் இவளல்லவோ
உலகை புரிந்து கொண்டவள்...

எழுதியவர் : (7-Jun-14, 12:24 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 50

மேலே