===அறிவியலா + ஆன்மீகமா===

அறிவியல் உலகம்
உருண்டை என்கிறது !

ஆன்மீகம் தட்டை என்றது.!

அறிவியல் பூமி சூரியனை
சுற்றுகிறது என்றது !

ஆன்மீகம் சொன்னவனை
விஷமிட்டு கொன்றது !

அறிவியல் கிரஹனம் கிரஹங்கள்
நேர் கோட்டில் என்றது !

ஆன்மீகம் ராகு கேதுவை
விளங்குங்கள் என்றது !

அறிவியல்
அம்மையை நோயென்றது !

ஆன்மீகம்
ஆத்தாவின் கோபமென்றது!

அறிவியல் குழாயில்
குழந்தை கொடுத்தது !

ஆன்மீகம் அரச மரத்தை
சுத்த சொன்னது !

அறிவியல் அனைவரும்
சமம் என்றது !

ஆன்மீகம் வருனம்
நான்கு என்றது !

அறிவியல் முயற்சிதான்
பலன் என்றது !

ஆன்மீகம் கர்மா ஜாதக
ரேகை வாஸ்து என்றது !

அறிவியல் ஆசை தான்
முயற்சியின் பொறி என்றது !

ஆன்மீகம் ஆசை தான்
துன்பத்திற்கு காரனம் என்றது !

அறிவியல் சொல்லும்
எல்லாவற்ரையும்
அறிவு நம்புகிறது !

ஆன்மீகம் சொல்லும்
எதையும் அறிவு
நம்ப மறுக்கிறது !

இருந்தும் அறிவியலை
விட ஆன்மீகம்தான்
ஆதிக்கம் செலுத்துகிறது !

எழுதியவர் : லெத்தீப் (7-Jun-14, 2:06 pm)
பார்வை : 195

மேலே