தமிழின்பம்

தவமின்றி பெற்றதாலோ
தமிழின் தாகம்கொள்ள மறுக்கிறாய்...

தாய்வழி வந்த மொழியது
தடங்களுக்காக தாரைவார்த்துவிடாதே...

இதிகாசம் கண்டு
இமயம் தொட்டமொழி...

இலக்கணம் கண்டு
இதயம் வருடியமொழி...

முப்பாட்டனார் கதைசொல்லும்
முதுமைமொழி…

முகர்ந்துபார் மூச்சுமுட்டும்
முனைந்துபார் முழ்கிபோவாய்...

திகட்டாத தேனது
பருகிப்பார் பக்குவம் தெரியும்..

அழியாத சிற்ப்பமது
அனைத்துபார் அசந்துபோவாய்…

களங்கமில்லா கவியமது
காதலித்துப்பார் கரைந்துபோவாய்…

தமிழ்மகனாய் பிறந்தவனே
வணங்கிப்பார் வாழ்த்துபெருவாய்
வாழ்ந்துப்பார் வளம்பெறுவாய்…

நாவினிக்கும் தேனமுதம்..
தேகிட்டாத தேனின்பம்..
எங்கள் தீராத தமிழின்பம்…

எங்கள் பாரதி போற்றிய மொழியடா..
மறவாமல் உன் சிந்தையில் ஏற்றடா..

எழுதியவர் : சிவா (10-Jun-14, 3:57 am)
பார்வை : 384

மேலே