கல்வி நிர்வாகம் தரம் நோக்கி நூல் ஆசிரியர் முனைவர் மூ இராசாராம் இ ஆ ப நூல் விமர்சனம், தமிழாக்கம் கவிஞர் இரா இரவி

TOWARDS QUALITY IN EDUCATINAL ADMINISTRATION !

DR.M.RAJARAM I.A.S.

கல்வி நிர்வாகம் தரம் நோக்கி !

நூல் ஆசிரியர் முனைவர் மூ. இராசாராம் இ .ஆ .ப

நூல் விமர்சனம், தமிழாக்கம் கவிஞர் இரா .இரவி !


தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை செயலர் முனைவர் மூ. இராசாராம் இ .ஆ .ப .அவர்களின் புதல்வி ஸ்ரீநிதி, செல்வன் சாகர் பென்டேலா அவர்களின் திருமண வரவேற்பு விழாவில் வருகை தந்த அனைவருக்கும் நன்கொடையாக மரக்கன்றுடன் வழங்கப்பட்ட ஆங்கில நூல் .அதன் தமிழாக்கம் நான் எழுதி உள்ளேன் .படித்து விட்டு தூக்கிப் போடும் நூல் அல்ல இது .பாதுகாப்பாக வைத்து படிக்கும் நூல் .ஹைக்கூ கவிதைகள் போல உள்ளன வாழ்வியல் சிந்தனைகள் உள்ள வைரகள் உள்ள வரி நூல். .

கையடக்க சிறிய நூல்தான் .சிந்திக்க வைக்கும் களஞ்சியமாக உள்ளது. பக்கம் பக்கமாக படித்தாலும் மனதில் எதுவும் பதியாத நூல்களும் உண்டு .இந்த சிறிய நூல் படித்தால் மனதில் கல்வெட்டாகப் பதிந்து விடுகிறது .கல்வி தொடர்பான கருத்துக்களை அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய ஆங்கிலத்தில் எழுதி இருப்பது சிறப்பு .நூலில் உள்ள வரிகளை உள்வாங்கி அதன்படி நடந்தால் வாழ்க்கை சிறக்கும். இனிக்கும் .

நூல் ஆசிரியர் முனைவர் மூ. இராசாராம் இ .ஆ .ப. அவர்கள் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஆங்கில திருக்குறளும் விளக்கவுரையும் எழுதி புகழ் பெற்றவர் .அவரது நூலிற்கு திருக்குறளை மிகவும் நேசிக்கும் மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் அணிந்துரை வழங்கி இருந்தார்கள் .நூல் ஆசிரியர் ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழியிலும் ஆழ்ந்த புலமை மிக்கவர் .நூலில் உள்ள அனைத்தும் அருமை என்றபோதும் ,எனக்கு மிகவும் பிடித்த சில மட்டும் உங்கள் ரசனைக்கு இதோ !

education !

what sculpture is to a block of marble education is to the human soul .

கல்வி!

பளிங்கியில் செதுக்கப்பட்ட சிற்பம் போல கல்வி ஆன்மாவில் அழியாமல் உள்ளது .

சிந்திக்க வைக்கும் சீன பொன்மொழியும் நூலில் உள்ளது .

a fish !
give man a fish he can eat for a day mach a man to fish , he can eat for a life time

ஒரு மீன்!

உண்ண ஒரு மீன் கொடுத்தால் ஒரு நாள் சாப்பிட முடியும் .மீன் பிடிக்க அவருக்கு கற்றுக் கொடுத்தால் வாழ்நாள் முழுவதும் சாப்பிட முடியும்.

பலர் வீடுகளில் பளிங்கி கற்களில் பெயர் பதித்து இருபதைப் பார்த்து இருக்கிறோம் .மனங்களில் பெயர் பதிய வேண்டும் என்கிறார்.

your name !
carve your name on hearts and not on marple .

உங்கள் பெயர்!
உங்கள் பெயர் கல்லில் இருப்பதை விட இல்லங்களில் உள்ளவர்களின் இதயத்தில் இருப்பது சிறப்பு .

attitude !

it,s your attitude not aptitude that determines the attitude .

மனோபாவம்!

உங்கள் அணுகுமுறைதான் உங்கள் மனோபாவத்தை தீர்மானிக்கிறது .
உலகப் பொது மறை படைத்த திருவள்ளுவர் வழியில் ஒழுக்கத்தை வழிமொழிந்த வாசகம் மிக நன்று

character !

ability can take you to the top .but character takes you to keep you there .

திறமை உங்களை உயர்த்தலாம் .ஆனால் ஒழுக்கமான குணம்தான் உங்களை உயரத்தில் தக்க வைக்கும் .


prime educators !

observation more than books , experience rather than person ,are the prime educators

முதன்மை கல்வி!

புத்தகங்களை விட கவனிப்பு, நபரை விட அனுபவம், முதன்மை கல்வி.

கல்வியின் சிறப்பு கவனிப்பில் உள்ளது . அனுபவத்தில் உள்ளது என்பதை நன்கு உணர்த்தி உள்ளார் .

share !

the real scret of happiness is not what you give or what you recive ; it,s what you share .

பகிர்தல் !

உண்மையான மகிழ்ச்சியின் ரகசியம் கொடுத்து வாங்குவதில் இல்லை பகிர்தலில் உள்ளது .

தனக்கு தனக்கு என்று எதையும் பதுக்காமல் பகிந்து வாழ்தல் சிறப்பு என்கிறார் .கற்ற கல்வியையும் பிறருக்கு பகிர்ந்து வாழ வேண்டும் .

a candle !

don't curse the darkness - light a candle .

ஒரு மெழுகுவர்த்தி !

இருட்டு இருட்டு என்று புலம்பாமல் உடன் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுங்கள் .ஒளி வரும் .

கவலையில் புலம்புவதால் கவலை காணமல் போகாது .புலம்புவது விடுத்து உழைத்தால் உயரலாம் .என்பதை உணர்த்துகின்றார் .

நாம் உண்மையோடு வாழ்ந்தால் உலகில் மதிக்கப்படுவோம் என்பது முற்றிலும் உண்மை .உதாரணம் காந்தியடிகள்

faith !

finally you will get what you want in life .
march forward with faith !

உண்மை !

வாழ்க்கையில் நேர்வழியில் நடந்தால் உண்மையாக இருந்தால் விரும்பியவை கிடைக்கும் .

திருமண தாம்பூலம் பைகளில் தேங்காய் , பழம் போடுவது விடுத்து இவர் போல சிறிய நூல் வழங்க முன் வர வேண்டும் .பையில் தேங்காய் இருந்து இருந்தால் சட்னி வைத்து சாப்பிட்டு இருப்போம் .நூலாக இருந்ததால் படித்து விமர்சனம் செய்துள்ளேன் .

இந்த நூலை கல்வி பயிலும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல்,
எல்லா மனிதர்களுக்கும் , எல்லா வயதினருக்கும் பொருந்தும் விதமாக வாழ்வியல் நெறி போதிக்கும் விதமாக மனதில் பதியும் விதமாக எழுதி உள்ள நூல் ஆசிரியர் முனைவர் மூ. இராசாராம்
இ .ஆ .ப.அவர்களுக்கு பாராட்டுக்கள் .

இந்த அரிய நூலை பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டு விற்பனைக்கு கொண்டு வாருங்கள் .பலரும் வாங்கிப் படித்துப் பயன் பெறுவார்கள் .


.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (11-Jun-14, 7:57 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 203

சிறந்த கட்டுரைகள்

மேலே