நுட்பமான நூல்களைக் கற்ற அறிவுடையோர் - ஆசாரக் கோவை 41

கண்ணெச்சில் கண்ணூட்டார் காலொடு ...கால்தேயார்
புண்ணிய மாய தலையோ டுறுப்புறுத்த
நுண்ணிய நூலறிவி னார். 41 ஆசாரக் கோவை

பொருளுரை:

நுட்பமான நூல்களைக் கற்ற அறிவுடையோர் ஒருவர் தன் கண்ணிற்கு மருந்திட்ட கோல் கொண்டு அவ்வெச்சில் கழியாது (அக்குச்சியைக் கழுவாமல்) இன்னொருவர் கண்ணிற்கு அக்கோல் கொண்டு அம்மருந்து போடமாட்டார்.

தன் காலோடு இன்னொரு காலைத் தேய்க்க
மாட்டார்.

புண்ணியமான பொருள்களை தலையுடனும், கண் முதலிய மற்ற உறுப்புடனும் ஒற்றிக் கொள்ள வேண்டும்.

கருத்துரை:

ஒருவர் கண்ணெழுதிய கோலைச் சுத்தம் செய்யாமல் பிறர் கண்ணிற் செலுத்தக்கூடாது. காலொடு கால் தேய்க்கலாகாது. புனிதமான பொருள் கிடைத்தால் அதனைத் தலையிலும் கண் முதலிய உறுப்புக்களிலும் ஒற்றிக்கொள்ள வேண்டும்.

"நுண்ணிய நூலுணர்வி னார்" என்றும் பாடம்.

குறிப்பு:

1965 - 68 வருடங்களில் நான் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது, கண்களில் மருந்திட களிம்புகள் பீங்கான் ஜாடிகளில் வைக்கப்பட்டு, 'வழுவழுப்பான கண்ணாடிக் குச்சிகள்' வைக்கப்பட்டிருக்கும். அதனால்தான் ஆன்டிபயாடிக், அட்ரோபின் கண் களிம்புகள் போடப்படும். அதன்பின் களிம்புகள் பிளாஸ்டிக் ட்யூப்களில் வர ஆரம்பித்தன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jun-14, 3:38 pm)
பார்வை : 93

சிறந்த கட்டுரைகள்

மேலே