போலி என்று
போலி என்று
தெரியாமல்
புதருக்குள்
ஒளியுது பல
காதல்.....
சர்ப்பத்தின்
பிடியில்
சகலதையும்
இழந்து
கர்ப்பம் தரித்து
தனித்து
நிற்குது
இன்னும் பல
காதல்......
கடல் அலை
பார்த்து
கவலை மறந்து
கடலை
போடும் காதல்
காதலை
மறந்து
களங்கம்
செய்யுது.......
புதருக்குள்
நீச்சலடிக்கும்
பதறுகளே
பதறுமே
பெற்றமனம்
பிள்ளை
மானம்
போனதை
இட்டு.....
ஒருமுறை
தான்
காதல்
ஒவ்வொருமுறை
ஒவ்வொருத்தர்
அல்ல.....
சுதி கண்ட
சுள்ளான்கள்
சுற்றிச்
சுற்றி
கண்ணடிப்பார்கள்
மதி கெட்டுப்
போகாதே......
மதிப்பும்
கெட்டுப்
போகாதே.....