அருளின் மகிமை

வழியெங்கும் போகுமிடத்தில்
வேல் விழி வந்து பார்க்குதடா !
அருள் கொண்டு நீ நடந்தால்
நல்பொருள் வந்து சேருமடா !

விழி கொண்டு பார்க்குமகத்துள்
நல்வழி தந்து காக்குமடா !
வேல்கொண்டு கீரி நாவில்
திருபுகழ் தந்த நாதன்
வளுதொண்டு தீருமடா !

வலுகொண்டு தாக்கி
கருணை கடவுலொன்று உண்டோ !
கல்லாமை இல்லாது போக்க
இல்லருள் வந்து சேருமடா !

வில் மனம் கொண்ட மனிதா
கணையொன்று வருகுது காண்!
கருணை கடலான எம்பெருமான்
கணையாழி தந்து மனையாள செய்யும்
அருள் கொண்டு நின்றிடுவான்!!

மனமகிழ்வோடு இணைந்தாடும்
வள்ளிதெய்வானை மனமொடு
திருப்பரங் குன்றாடும் மயிலோனை
நாளும் துதிக்க மனம்நினைத்தது ஈடேறுமே !

கொலைகண்டு மிரளாதே!
அருள்கண்டு நில்
வரும் துயர் பறந்தோட
மனம் உறுதியாய் நம்பினாலே!!

கவிபல தந்த கந்தனடா
தமிழ் தொழும் தெய்வம் முருகனடா !
அருள்மாரி யிலொரு துளி எந்தனடா
அவனருளாலே தினம்கவி படைக்கும்
எம் சிந்தையடா...!

வந்தனை செய்வோரை தனதாக்கி
நற்சிந்தனை தந்திடும் கந்தனடா !
அந்தணர் முதலும் ஆண்டியும்
அனைவரும் சமமனிதரென
அகிலதிற்க்குரைக்கும் முருகனடா !!

அன்றே பூண்ட கோலம் கண்டவர்கள்
அருள் கொண்டு வாழ்வாரடா !
கொலை பலச்செய்யும் சூரனை
வதம் செய்திடும் சம்ஹாரனடா !
ஓம் சரவணபவ மந்திரத்தில்
உறையும் சரவணனை தொழும்
அன்பர்க்கு சரணம்! சரணம் !!

எழுதியவர் : கனகரத்தினம் (14-Jun-14, 1:10 pm)
பார்வை : 131

மேலே