மலரும் நினைவுகள்
கவலைகளை மறந்தோம் -நெஞ்சம்
காட்டாறு வெள்ளம் போல் எழுந்தோம்..
மிதி வண்டி எடுத்து நான்
வீதி வரும்போதெல்லாம் என் நெஞ்சில்
சுதி எற்றிப்போகுமடி உன் கால் கொலுசொலி..
சிறகடிக்கும் பறவையாய் உன்
உறவுக்காகத்தானடி சுடும்
தார் சாலைகளும் எனக்கு குளிரும்
மலர் சோலைகளாய் எண்ணி
வலம் வந்தேன் நீ
வரும் வீதிகளில்..
பள்ளிப்பாடம் நினைப்பில்லை
பாவை உன் நினைவுகள் தானடி
பச்சைக்குத்தி நிற்குதடி
பாவி இவன் நெஞ்சமெல்லாம்..
நினைவுகளை
நினைத்துப்பார்க்கின்றேன் ..
பொட்டல் காடுகள் கூட எனக்கு
பூங்காவனமாய் தெரிகிறதே