அகவை

உன் அன்பின் முன்
முதன் முதலாய் என் அகம் இழந்தேன்
ஆயிரம் வார்தைகள் சொல்லாததை
உன் ஸ்பரிசம் சொல்லும் அன்பில்
ஆறுதல் அடைந்தேன்
உன் பொறையின் முன்
என் கோபம் இழந்தேன்
தினமும் தொலைபேசியில்
நெருக்கமாய் உன் குரல் தரும் நம்பிக்கையில்
என் சலனம் வென்றேன்
உன் நகையின் முன்
என் கண்ணீர் இழந்தேன்
உன் லட்சியம் கண்டு
நலிந்திருந்த என் கனவுகள்
புத்துயிர் பெற நெகிழ்ந்தேன்
இப்படி பல முதல் அனுபவம் .......
நேற்று வரை முப்பது அகவை முடிய கண்டேன்
ஆனாலும் இன்றே என்
முதல் அகவை எனக் கொண்டேன்
கொண்டாடினேன் .

எழுதியவர் : Madhubala (16-Jun-14, 10:43 am)
Tanglish : akavai
பார்வை : 159

மேலே