சற்றே திரும்பிப் பாருங்கள்

'சற்றே திரும்பிப் பாருங்கள்!'
விவேகானந்தர் ஒருமுறை, இமயமலை நோக்கிபயணித்துக் கொண்டிருந்தார். அவருடன் வந்த வயதான முதியவர் ஒருவர், ''இன்னும் நீண்ட தூரம் பயணிப்பது சாத்தியம் இல்லை. இதற்கு மேல் என்னால் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாது. நெஞ்சே வெடித்து விடும் போல் இருக்கிறது'' என்று புலம்பினார்.
உடனே விவேகானந்தர், ''நீங்கள் கடந்து வந்த பாதையை சற்றே திரும்பிப் பாருங்கள்; உங்களுடைய கால்களின் மூலம்தான் இவ்வளவு தூரத்தையும் கடந்து வந்திருக்கிறீர்கள். இதே கால்களால்தான் இன்னமும் உள்ள தொலைதூரத்தை கடக்கப் போகிறீர்கள். அதற்கான சக்தியும் உறுதியும் உங்களது கால் களுக்கு உண்டு'' என்றார்.
இதைக் கேட்டு உத்வேகம் அடைந்த முதியவர், தொடர்ந்து நடப்பது என்று உறுதி கொண்டார். இந்த வைராக்கியத்தால்தான், விவேகானந்தருடன் இமயமலை செல்லும் பாக்கியம் முதியவருக்குக் கிடைத்ததாம் !

எழுதியவர் : கே.என். மகாலிங்கம் (16-Jun-14, 6:13 pm)
பார்வை : 348

மேலே