ஏனய்யா கசப்பு, நானய்யா சுமந்தது

ஏனய்யா? இந்த கசப்பு

நானய்யா உன்னை சுமந்தது கருவிலே

வீடு வரை வர வழி தெரிந்த உனக்கு
என் அறை வாசலுக்கு வழி தெரியலையோ?

வீதி வரை தினம் வந்து பள்ளிக்கு வழி அனுப்பிய
எனக்கு இந்த செயலுக்கு விளக்கம் தெரியலையே

மோட்டு வளை பார்த்து நாளெல்லாம்
அமர்ந்திருக்கும் எனக்கு உந்தன் காலடி
சத்தங்களே கணக்கு

வீட்டுக்காரியின் மேலே இருக்கும் கரிசனத்தில்
கொஞ்சம்,

வீடாக நீ பத்துமாசம் இருந்த இந்த வயிற்றுக்கு
சொந்தக்காரியின் மேலே ஏன் இல்லை மகனே

மாடாக உழைத்த என்னிடம், உன் வீட்டு நாயாக
கருதியாவது கொஞ்சம் பேச்சு கொடேன்

தாயாக இல்லை, ஒரு நன்றியுள்ள நாயாக
கேட்கின்றேன் இதை உன்னிடமே

தருவாயோ இன்றேனும் இந்த வரத்தை
எனக்கு, சொல் மகனே

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (19-Jun-14, 3:57 am)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 123

மேலே