வசந்த கால நினைவுகள்

வசந்த கால பருவத்திலே
வரும் ஞாபகங்கள் எல்லாமே

இளமை காலத்தை பற்றியே
எனக்குள்ளே

அந்த நாளில், ஒவ்வொரு நொடியும்
சொர்க்கமாய் இருந்ததே, எந்தன்
வாழ்விலே

கல்லூரி மதில் சுவரில் அமர்ந்து
பேசிய கதைகள், நிஜத்தில் காவியம்

அப்போது நாங்கள் கூடி செய்த
கேலிகள் எல்லாமே எங்களுக்கு
இளமை தந்த லாலிகள்

வாத்தியாருக்கு தெரியாமல்
புகைபிடித்தல், அவர்கள் கண்ணில்
பட்டால் பின் மறைத்து சுட்டு
கொண்ட கோலங்கள்

வந்தனாவின் பின்னலை நாற்காலியின்
கால்களில் கட்டி விட்டு அழவைத்த
நேரங்கள்

வசந்தாவின் நோட்டு புத்தகத்தில்
வரைந்து வைத்த நிர்வாண படங்கள்

அவள் முறைக்க, நாங்கள் எதிர்க்க
ஹூம் என்ற தலை சிலிர்ப்புகள்

பரீட்ச்சையில் பார்த்தெழுதி மாட்டி
முழித்த திரு, திருக்கள்

அப்பாவின் கையெழுத்தை போட்டு
பின் அதை அவர் கண்டு பிடித்து
விளாசிய விளாசல்கள்

தேநீர் கடையில் மணிக்கணக்காய்
அமர்ந்து, தேவை இல்லாத அனைத்தும்
பேசி, சிலரை ஏசி, சிலரிடம் ஏச்சுக்கள்
வாங்கி, என்னென்ன கோலாகலம்

எப்படி தான் கழிந்ததோ இளம் பருவ
காலம், அத்தனை வேகமாகவே

என்னென்னவோ ஏக்கங்கள் இன்று
தருகிறது அந்த நினைவுகள்

இன்று வாழ்க்கை ஓடுகிறது அசுர
வேகத்திலே, ஒட்டுகிறது என்னையும்
இயந்திர கணத்திலே

ஓடிடும் நேரத்தில், ஒரொரு நொடிகள்
இந்த நினைப்புகள் தான் ஆனந்தம்

நினைப்புகள் மட்டும் எனக்குள்ளே
சாசுவதம்

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (19-Jun-14, 4:14 am)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 361

மேலே