தந்தானா, தான, தன, தந்தேனா

தந்தானா, தான, தன, தந்தேனா..!
தன தானா, தான, தன, தன்னானா..!

என் மனசை உன் கிட்டே தந்தேனா..!
ததிங்கினதித்தோம் என்று உல்லாசம்
கொண்டேனா...!

உள்ளத்திலே சுகம் பரவ, எண்ணத்திலே
சுமை குறைய, நின்னேனா...!

ஊருக்குள்ளே இந்த விஷயம் தெரிய
அவரவர் மனதுக்குள்ளே காழ்ப்பு நிறைய

எனக்கதிலே கவலையில்லை, என்
தேவதைய நான் கண்டு விட்டேன் தன்னேனா...!

தந்தானா, தான, தன, தந்தேனா..!

வயல் வெளியில், கதிர் மறைவில்
நாம் சந்திக்க

வரும் வெய்யிலில் நிழலுக்காக
அதனடியில் நாம் ஒதுங்க

நாத்து நடும் கிழவிக்கெல்லாம் நமட்டு
சிரிப்பு, நம் ஒதுக்கம் பார்த்து

பார்த்து ரசிக்க நேரமில்லை அதை எனக்கு
காதலிக்க கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கு
இன்றெனக்கு

தந்தானா, தான, தன, தந்தேனா..!

பண்ணையாரின் வீட்டு சாப்பாடு
மிச்சம் இருக்கு நாம் பசி ஆறுவதிற்க்கு

காதலித்த களைப்பு தீர தின்றிடுவேன்
ஊட்டி விட நீ எனக்கு

உண்ட களைப்பு தீர, உன் மடி சாய்ந்திடுவேன்
துயில் கொள்ள

மாலை வரும் வரையில், நீயும், நானும்
கதை பேசிடலாம் மணி கணக்கில்

கன்னி பெண்ணே உந்தன் கழுத்தில்
என் தாலி ஏறும் வரை, காதலித்திடலாம்
வயல் வெளியில்

தந்தானா, தான, தன, தந்தேனா..!

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (19-Jun-14, 6:09 am)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 45

மேலே