காக்கை சிறகினிலே....

ஒரு ஊரில்
ஒரு காகம் இருந்துச்சாம் ...

அதன் குஞ்சுக்கு - அன்று
கோபாம் வந்துச்சாம் .....

ச்சீ போ ...

வானுயர்ந்த தூரத்தில் வந்தா
யாரவது கூடு கட்டுவார்கள்....

கூடு கட்ட
மெத்தை கிடைக்கவில்லையா ....
இந்த முட்கள்தான்
கிடைத்ததா உனக்கு ?

கூட்டுக்கு நீயேன்
கூரை வைக்கவில்லை....
மழையில் ஏன் என்னை
நனைய வைக்கிறாய் .....

காலையில் கொஞ்ச நேரம்
தூங்க முடியவில்லை...
கூட்டத்தோடு நீயும்
கத்தித்திரிகின்றாய்

நீயேன் எப்போதும் - என்
கூடவே இருப்பதில்லை ...

இத்தனையும் ஏன்...

சிவந்த கண்கள்...
சில்லென்ற குரல்.....
என் சகோதரிக்கு,

என்னை மட்டும் ஏன்
உன்னைப்போல் பெற்றாய் ?

நீயெல்லாம் ஒரு காகமா ?

இத்தனையும் கேட்ட
குஞ்சுக்கு
இதுவரை எதுவுமே சொல்லவில்லை
அந்தத் தாய்க்காகம்

வாய் முழுக்க தீனி

வாய் திறந்து
எப்படித்தான் சொல்லும்

ஒவ்வொருவாய் ஆக்காட்டுங்கள்
சைகையால் சொன்னது...

தன் தொண்டையில் இருக்கும்
சோற்றுப்பருக்கைகளை
அதன்
வயிற்றுக்குள் செலுத்த
யோகம் இல்லாமல்
தாய்ப்பாசம்

பசியின் மயக்கம் ஒரு புறம் ......
குஞ்சுகள் தனிமையில் என்று
பதறியடித்து பறந்து வந்த
களைப்பு ஒரு புறம்....

தன் பொன் குஞ்சுகளோடு
இன்னுமொரு
குயில் குஞ்சுக்கும் சேர்த்து
சமனாய் உணவூட்டியது
அந்தத் தாய்க்காகம்.

அம்மா
என் கேள்விக்கு பதில்....

தன் பெரிய அலகுகளால்
அக்குஞ்சை
இழுத்து அனைத்து
நெஞ்சிக்குள் புதைத்து
அதன் தலையில் கோதி...

கா கா என்றது........

தாயாகும் போது
நீயாக புரிந்து கொள்வாய் மகளே ....
என்றது...
அக்குஞ்சுக்கும் விளங்கியிருக்க வேண்டும் ....

கா கா ....என்று தன் பங்கிற்கும் சிரித்தது ....

காகம் பறந்து போச்சாம் என்றதும்.....

கதை கேட்டு
அரைத்தூக்கத்தில் ...
கை தட்டின
குழந்தைகள்

தள்ளாத வயதிலும்
தன்னால் சில குழந்தைகளை
தத்தெடுக்க முடிந்த
சந்தோசத்தில்...

சாலையோரப் பிச்சைக்காரி...

எழுதியவர் : natheer sheriff (10-Mar-11, 6:25 pm)
பார்வை : 517

மேலே