மாறியது

ஏணிகளை எட்டி உதைக்கும்
அரசியல்வாதியாய்
எப்போது மாறினாய் மழையே,
தலையில் உன்னைத்
தூக்கிவைத்து ஆடிய
பச்சைப் புற்களைப்
படுக்கவைத்துப்
பாடாய்ப் படுத்துகிறாயே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Jun-14, 6:41 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : maariyathu
பார்வை : 35

மேலே