கறை வாழ்கை

புதிதாய் வாழ்த்தொன்று சொல்லி
வழமாக வாழ
வையத்தில் இடமில்லை
வரட்டு கௌரவத்தால்
வரிகேட்டு நிக்குதடி
வாழ்க்கை

சாதிகள் இரண்டொழிய
சந்தம் பலநூறு
சாகச இவ்வுலகை
சாமியாட வைகுதடி
மனிதனில் வைகுலத்தில்
ஆணொன்று பெண்ணொன்று
இவ் உண்மை புரியா
மக்கள் தற்கெடு
கெட்டுபோகுதடி

வசந்தத்தின் வெள்ளம்
வரைபுரண்டு ஓடையிலே
காலத்தின் மாற்றம்
காதலில் சேர்க்ககண்டேன்
கைகொண்ட காதல்
கரை பிரளமுன்னே
கைப்பிடி போட
பெரியோர் முகதாவில்
முன்மொளிகையிலே

சாத்தானே உன்பெயரில்
சாதிகள் பிரிவுகண்டு
கை பிரித்திட- என்
காதல் தேவதை
வரன்கள் பல சூழ
வெள்ளி ரதம் தனில்
வெளிநாடு கடத்தப்படுகையில்
என் உள்ளம் மெல்ல உன்மடி
அருகினில் மடியகண்டேன்

ரதம் தன்னில் கைகொண்டவனோ
கறைகொண்டு வாழ்கையிலே
நீ அருகிலிருந்தும் மறு துணையே
நீ அவனுக்கு

எழுதியவர் : அருண் (21-Jun-14, 10:33 pm)
பார்வை : 130

மேலே