விதியும் வேதனையும்

..."" விதியும் வேதனையும் ""...

எல்லாம் அவன் செயல்
இரட்டையர்கள்
அல்ல இவர்கள்
விலா எலும்போடு
ஒட்டிப்பிடித்து
விழாமல் இணைந்து
வாழும் ஓருயிர்
உங்களுக்காயிந்த
உலகம் ஆயிரம்
அனுதாபங்கள்
சொல்லுகிறபோதும்
சொல்லிட முடியா
சோகங்களோடே
புன்னகை பூக்கும்
வேதனை மலர்கள்
உன்னை வேடிக்கையாக்க
எனக்கு விருப்பமில்லை
வேண்டிக்கொள்வேன்
உனக்காய்
இறைவா உந்தன்
படைப்பில் இப்படியும்
இருகரங்கள் ஏந்தி
இறையுன்னிடம்
இவர்களுக்காய்
எது வேண்டுமென்று
எனக்கு உன்னிடம்
கேட்க தெரியவில்லை
நீ இவர்களுக்கு என்றும்
நிம்மதியை தா
என்ற ஒன்றைத்தவிர ,,,

இறையிடம் பிராத்தித்தவனாய் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (23-Jun-14, 11:27 am)
பார்வை : 62

மேலே