மறவாதே மனிதா

பச்சையம் மாறாமல்
பசுஞ்செடி போல்
வாழப் பழகு எப்போதும் ....
மண்ணிற்குள் உடலைப் புகுத்தி
அமைதியாய் இராதே
உன்னால் உலகம் போற்றவேண்டும்
மட்கிப் போகாதே! இனியும்
மறவாதே மனிதா....!

மதமெனும் பூதத்திற்குள்
புகுந்து கொண்டு
மதம் கொண்ட யானை போல
அலைந்து திரியாதே! அது
உனக்கு நிலையில்லாமல் ஆக்கிடும்
உன் வாழ்கை உன் கையில்
யாவரையும் காயப் படுத்தாதே..
இனியும் புரிந்து கொள்
மறவாதே மனிதா...!

பசுத் தோல் போர்த்திய புலியாய்
மானிட விலங்கிற்குள் புகுந்து
கொடுமைகள் செய்யாதே
கொடுமைகள் கண்டு
அமைதியாய் ஜடமாய் இராமல்
யாரையும் காயப் படுத்தாமல்
மானுடனாய்! இனியும்
மறவாதே மனிதா...!

முள் கிரீடம் ஏந்திக் கொண்டு
முட்களில் நடவாதே
அழகான உன் மனதை
அழகான ரோஜாக்களாய்
மலர்ந்து மன(ண)ம் வீசு
எதற்கும் தயங்காதே
ரணங்களை எட்டி உதைத்துவிடு
இனியும் மயங்காதே
மறவாதே மனிதா...!

வாடியப் பயிரை வாழ விடு ...
ஊமை மைந்தனை (மண்)வாழவிடு...
மத (ம்)யானையைக் கட்டுப் படுத்து ...
கொடுமை எனும் சாக்காட்டை இழுத்து மூடு ...
இறை(ர)யை வளர்த்திடு! வாழ்த்திடு ..
இது வாடியோர் வாழ்ந்த பூமி உன்னால் நிலைக்கட்டும் இனிதே....
மறவாதே மனிதா...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (24-Jun-14, 6:08 am)
Tanglish : maravaathe manithaa
பார்வை : 854

மேலே