ஏகாந்தம் தேவை என

ஏகாந்தம் தேவை என
ஏராள புத்தகங்கள் எடுத்து
கொண்டு

பூங்காவிற்கு சென்று
அமர்ந்தேனே

என்னவென்று சொல்ல அதை...!

யார், யாரோ அங்கு இருந்தாரே
எதை, எதையோ பேசி என்
ஏகாந்தத்தை கலைத்தாரே

எங்கேயும் அமைதி இல்லை
எவருக்கும் தெரிவதில்லை

பேசாமல் கொஞ்ச நேரம்
இருந்திட என்று கற்பாரோ?

எப்போதும், எல்லோர்க்கும்
பேச்சு துணை தேவையில்லை

எத்தனையோ நேரங்களில்
அமைதியை மிஞ்ச எதுவுமில்லை

ஏகாந்தத்தை கலைக்காதீர்
அடுத்தவர் எண்ணம் அறியாமல்
பேசி, பேசி அவர் நிம்மதி
கெடுக்காதீர்

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (25-Jun-14, 1:36 pm)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 116

மேலே