என்னைத் தேடு சகலமும் உன்னைத் தேடும்

இரண்டு சிறுவர்கள் இருந்தனர் . அதில் ஒருவன்
தினமும் காலையில் கோவிலுக்கு போவது வழக்கம்
.ஒருநாள் அவன் கோவிலுக்கு போகும் வழியில் காலில் முள் தைத்து விட்டது .

மற்ற சிறுவன் நடந்து வருகையில் காசு கண்டெடுத்தான் .
காசு எடுத்த சிறுவன் உடனே அவனைக் கேலி செய்தான் . எப்படி

பார்த்தாயா நீ ஒவொரு நாளும் கோவிலுக்குப் போகிறாய் உன் காலில் முள் தைத்து விட்டது. நான் கோவிலுக்கே போவதில்லை ஆனால் எனக்கு காசு கிடைத்தது என்று மகிழ்ந்தான் .

அவ்வழியால் வந்த வழிப் போக்கன் அவர்களை அழைத்து கூறினான் ,
கோவிலுக்குப் போகும் சிறுவனுக்கு வரவிருந்த பெரிய ஆபத்து சிறு முள்ளாய் குத்தியது ,

கோவிலுக்கு போகாத சிறுவனுக்கு உனக்கு கிடைக்க இருந்த
பெரிய அதிர்ஷ்டம் கிடைக்காமல் போய் விட்டது . என்றான்.

என்னைத் தேடு சகலமும் உன்னைத் தேடும் . கடவுளைத் தேடுவோருக்கு எல்லாம் நன்மையே .

எழுதியவர் : பாத்திமா மலர் (27-Jun-14, 12:46 am)
பார்வை : 271

மேலே