வாலிபம் தொலைத்த வயோதிகம்

..."" வாலிபம் தொலைத்த வயோதிகம் ""...

எத்துனை வேதனைகள்
எண்ணிலடங்கா சோதனைகள்
சில்லறையின் ஓசையிலே
சிதறிவிட்ட சிரிப்பொலிகள்
கல்லறைவரையிலும் நீடிக்குமோ!!
மாதம் ஒருமுறையேனும்
எங்கள் மனம் மெல்ல சிரிக்க
மறுநிமிடம் மறைந்துவிடும்
பாலைநிலத்து கானல்நீராய்
எம் ஒற்றுமையின் தேசமிது
முகம் அறியாத உறவுகளும்
மொழி அறியாத தோழமைகளும்
சங்கமிக்கும் ஓர் உயிர்க்கடல்
கடல்தாண்டியே அலையலையாய்
சங்கடங்களை சங்கதியாக்கி
சந்தங்களோடு பாடல்கள்
நாங்கள் பட்ட பாடுகளோடு
கடிகாரத்தின் சுழற்சியைவிட
வேகமாக ஓடுகின்ற வாழ்க்கை
தேகம் சிந்திய வியர்வையால்
செழிப்பான பாலைவனசோலை
நாமோ வற்றிவிட்ட கேணியென
வெடித்துகிடக்கும் பூமிபோல்
மனம் வலிக்கும் வார்த்தைகள்
செவிமடுத்து கொஞ்சம் கேழுங்கள்
இலந்ததையென்னி வருத்தமே
இருப்பவரை எண்ணி வாழ்வதால்
இருக்கும்வரை இது தொடருமோ!!?
விடையில்லா கேள்விகளாய்
விடியலுக்காய் காத்திருப்பு ,,,,,,

என்றும் உங்கள் அன்புடன் ,,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (28-Jun-14, 12:19 pm)
பார்வை : 2376

மேலே