தொலைபேசி -தொல்லைபேசி 1

அழுது கொண்டே அம்மியில் அரளி விதையை அரைத்து கொண்டு இருக்க அந்த வழியே சென்ற நான். 1; ஏத்தா ஏன் அழுகிற? என்னாச்சு?
2;(அழுகிறாள் , பேச்சே இல்லை வெறும் விசும்பள் மட்டுமே )
1;சொல்லி கிட்டே இருக்கன் இல்ல அழுவாம என்னாச்சு னு சொல்லு
2;நா என்னத்த சொல்ல .நா என்ன பாவம் ஏய் கருமாரி ஆத்தா உனக்கு கண் இல்லை யாடி
1;எலே என்ன ஆத்தா என்னனு சொல்லு ஒன்னும் புரியல
2;நேத்து அந்த ஆளு போணு ஒன்னு வாங்கி இருக்கன் இந்தா நம்பருனு ஒரு தாளு ல எழுதி குடுத்தாறு (தேம்பி கொண்ட டே )
1;ம்ம்ம்
2;இப்ப போண் பண்ணா யாருடையோ தொடர்பு ல இருக்கராம்
நா என்ன குறை வச்ச அந்த ஆளுக்கு
எல்லாம் இந்ந போணு கருமத்தால தான்
1;ஆத்தா வேற யாரு கூடையா பேசிக்கிட்டு இருக்கறாரு (user busy )
2;இந்த பாவி என்ன யாமாத்தி டானே நா இருந்து என்ன பண்ண போரன் ..
1;?????

எழுதியவர் : கிருஷ்ணா (28-Jun-14, 7:23 pm)
பார்வை : 198

சிறந்த நகைச்சுவைகள்

மேலே