Crop செய்யப்பட்ட பெண்ணியம்

பெண்ணியம் எனும் போர்வையில்
பெண்மையின் தனித்தன்மையை
தகர்த்து அழித்து மண்ணிலிட
இயங்குது பல கூட்டங்கள் இங்கே !

பெண் ஆழ்நாணத்தை கூட சுட்டி
மேலாதிக்க விளைவாய் காட்டி
பெண்மை என்கிற வேரை
சிதைவு எனும் நிலையிட்டது
ஆணாதிக்க கூட்டமல்ல
எம் நாடு மீதான
முதலாளித்துவ
நீண்ட முதல் அடி !

நானே கண்ட என் பாட்டியும் பூட்டியும்
வீரத்தில் சிறந்தவளாய் வீட்டில் உயர்ந்தவளாய்
ஊருக்கே உன்னதமாய் தான் இருந்தாள் !
'ஆத்தாக்கு தெரிஞ்சா அவ கொன்னுடுவா' என
பிள்ளையும் பித்தனும் சுப்பனும் குப்பனும் கூட
அவள் நேர்மைக்கும் நிர்வாக திறமைக்கும்
அஞ்சி நடுங்கிய காட்சி பல நானே கண்டதுண்டு !

எம் குல பெண்களெல்லாம்
சமூக சம உரிமையில் செழித்தே இருந்தார்கள் !
இடையில் வந்த இம்சை வெள்ளைக் கூட்டங்கள்
இந்த இரும்பு இணைப்பை இணைந்தே சிதைத்தார்கள்
சிதைத்தே சுகித்தார்கள் - இன்றும்
அதில் சுகித்தே சிறக்கிறார்கள் !

நாம் மட்டும் அழகாய் தெரிய
அருகில் நம்மை விட
அழகாய் இருப்பவனை 'crop ' செய்து
profile pic போடுவது தான்
இதன் அடி தந்திரமும் !
எதை நம்புவதென்று நீயே யோசி !

எழுதியவர் : ராம் (30-Jun-14, 12:09 am)
பார்வை : 108

மேலே