போர்க்களப் பயணம்
கலிகாலம் காலிகளின் பொற்காலம்
தோளில் செல்பேசி; தாங்கிப் பிடிக்கத் தாடை.
.தொடர் பேச்சோடு மின்னல்வேகப் பயணம்
சாலைப் பயணம் போர்க்களம்.
வீடுவந் தடைதல் வீரனுக்கு அழகு
விபத்தைக் கொடுத்துத் தப்பிவருதல்
புறமுதுகிட் டோடும் கோழையின் செறுக்கு
விபத்தில் இறந்தால் வீரமரணமா?
உறவினர் நண்பர்க்கது ஆற்றாத்துயரம்
படுகாய மடைந்து உயிர்த்தெழுவது
ஆறுதல் தருகின்ற விஷயமென்றாலும்
செலவும் சுற்றத்தினர் படுகின்ற அல்லலும்
அனுபவித்தவ்ர் அல்லவோ உணர்ந்திடுவார்கள்.
இவற்றை யெல்லாம் அறிந்த பின்பும்
எப்பேரைப் பெறநீர் பயணம் செய்வீர்?
விபத்துகள் குறைய வழியே இல்லையா?
ஒவ்வொரு மனிதனும் எச்சரிக்கையுடனே
சாலையில் சென்றால் விபத்து நடக்குமோ?
விதிகளை மீறிப்பறப்பவர் திருந்த
தேவை அவரைத் திருத்தும் எச்சரிகை:
”எமலோகம் போகவா தலைதெறிக்கும் வேகம்?”
மூடநம்பிக்கையில் ஊறித்திளைப்பவர்
அச்சங் கொண்டு திருந்திடு வாரே
பகுத்தறி வாளரும் இதைக் கண்ணுற்றால்
திருந்திட வாய்ப்பு சுரந்திடு மன்றோ!
மிதமான வேகத்தை இதமாய்க் கொண்டு
கவனமாய்ச் சென்று வீடுவந்தடைவது
நமக்கும் நன்று நாட்டுக்கும் நன்று.

