எழுதுகோல்

எழுதுகோல்.....

எழுது எழுது என என்
விரல்களுக்கு வேகம் கொடுத்து
எதை எழுத எதை விட என என்
மூளைக்கு வேலை கொடுத்து
உள்ளத்தில் உதித்திடும்
உணர்ச்சிப் பூக்களை
ஒன்றிரண்டாய் கோர்க்கச் செய்தாய்

கற்பனை பூ
கண்ணீர் பூ
காதல் பூ
காவிய பூ

ஒவ்வொரு ரகமாய்
என்முன்னே
மலர வைத்தாய்.....

அழுகையோ
ரசனையோ
கோபமோ
வெறுப்போ
விருப்போ

எனக்குள் வேகம் தந்து
என் கிறுக்கல்களின்
முதல் ரசிகன் ஆனாய்..
நானுனக்கு சொல்கிறேன்
நன்றிகள் ஆயிரம்.....

எழுதியவர் : நிஷா (5-Jul-14, 4:16 pm)
Tanglish : ezhuthukol
பார்வை : 131

மேலே