மீண்டும் வானம்பாடி

வானம்பாடியே மீண்டும் இங்கு வா
பழைய பஞ்சாங்கங்களில் இருந்து மீண்டுவா
ஆனந்த சிறகுகளை உதிர்த்து விடு
அக்னி சிறகுகளோடு உயிர்த்து எழு.....

ஆகாச வானில் கவிதை வேண்டாம்
ஐ.நா சபையில் கவிதை பாடு
இத்துனூண்டு தமிழ்நாட்டிற்குள் உன்னைச் சுருக்கிக்கொள்ளாதே
பாகைமானியின் கிரகணமாய் பாரெங்கும் பரந்துவிரி.....

விஞ்ஞானம் பற்றிய உன்னை எழுது
புதுப்புது அறிவியலை உன்னில் எழுது
தேடலைத் தேடித்தேடி தமிழில் எழுது
உந்தன் பேரேட்டில் சுருங்கட்டும் பேரண்டம்....

ஏழெட்டு மொழிக்குமேல் இங்குண்டு செம்மொழிகள்
அதிலொன்றோ நம்தமிழ் ; பெருமை வேண்டாம்
அமெரிக்காவில் அலுவல்மொழி ஆகட்டும் தமிழ்
அத்துடன் தேங்கிவிடாதே ; பால்வீதியில் கானம்பாடு....

எழுதியவர் : த.மலைமன்னன் (7-Jul-14, 8:24 am)
Tanglish : meendum vaanampaadi
பார்வை : 123

சிறந்த கவிதைகள்

மேலே