கனவொன்று கண்டேனடி - தோழி
வெள்ளிக் காலையிலே
சேவக் கூவையிலே
கனவொன்று கண்டேனடி - தோழி
புதியதோர் உலகிலே
பதியவோர் புதிய தளம்
அதில் போர்வைகள் தேவையில்லையடி - தோழி
முகம் காட்டாத புத்தகமும் அல்ல
நீல வண்ணக் குருவிகளும் அல்ல
அதிலேதும் எழுத்துக்களும் இல்லையடி - தோழி
புனைப் பெயர்களில் படைப்புகள் கண்டேன்
பொய்ப் பெயர்களுக்கு தடைகளும் கண்டேன்
ஒழுக்கமும் பேணிடக் கண்டேனடி - தோழி
வாதங்கள் வானளக்க கண்டேனடி
வீண்வார்த்தைகள் மடிந்திடவும் கண்டேனடி
புண்பட்ட மனங்களும் இல்லையடி - தோழி
விழித்ததும் உன்னையே எண்ணினேனடி
கனவு பழிக்க துடிக்கிறேனடி
உன்னை அத்தளத்திலே காணவேண்டுமடி - தோழித் தமிழே