காதல் வரம் கேட்கிறேனடி உன்னிடம் 555
உயிரே...
நான் பசியாற உன் கையால்
கையளவு உணவு போதும்...
உயிர் வழ்ந்துவிடுவேன்...
நான் கையேந்திய பின்பும்
கொடுக்க மனமில்லை உனக்கு...
உன் ஒரு நிமிட
குரல் போதும்...
நேரில்தான் இல்லை
கைபேசிலாவது...
நான் சுவாசிக்க
மண்ணில்...
மௌனம் மட்டுமே
சொந்தம் என்கிறாய்...
என்னை முழுவதும் புரிந்து
கொண்டவளென நினைத்தேன்...
நீயோ புரியாமலே...
என் உயிரை விட உன்னை
அதிகம் நேசித்தவன்...
நான் என் காதலை
சொல்லுமுன்னே...
நீயாக புரிந்து
கொண்டவள்...
நான் கை நீட்டி கேட்டும்
நீ தர மறுபதென்ன காதலை...
மண்ணில் மறைய
துணிந்தாலும்...
உன் நினைவை மறக்க
முடியவில்லையடி...
காதல் வரம் கேட்கிறேன்...
என் காதலியே கை நீட்டி வருவாயா
என் கரம் பிடிக்க...
காத்திருகிறேனடி நான்
தனிமையில்.....