காதலே என் கண் காதலே

அனைத்திலும் உன் முகம் அலைப்பாய்கிறது
என் அங்கங்கள் அனைத்தும் உனைத் தேடுகிறது
பசி எடுத்தாலும் சாப்பிட என் மனம் யோசிக்கிறது
என் மத்தியில் உன் நினைவு எனைக் கேட்கிறது நீ உண்டிருப்பாயாயென
ஏனோ எனக்கிது புது உணர்வு
ஏனோ எனக்கிது புது நிகழ்வு
ஏனோ என் மனதில் புது மகிழ்ச்சி
ஏனோ என் உதட்டில் புது புன்னைகை பெண்ணே உன்னால்.

எழுதியவர் : ரவி.சு (7-Jul-14, 9:59 pm)
பார்வை : 102

மேலே