உலகிலேயே சிறந்த பல்பொடி

உலகிலேயே சிறந்த பல்பொடி இதுதான் நண்பர்களே....
கருவேலம்பட்டை பொடி, கடுக்காய் பொடி இரண்டையும் சரிசமமாக கலந்து ,கூட பத்து கிராம்பினை பொடி செய்து கலக்கிகொண்டால் அட்டகாசமான
பற்பொடி தயார்...
கட,கட என்று ஆட்டம் கண்ட என்னுடைய நான்கு பற்கள் ....அனபாண்ட் போட்டு ஒட்டியது போல ஆடாமல்,அசையாமல் பலத்தோடு இப்போது..
முன்பெல்லாம் ஒரே ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டாலே மதிய உணவு சாப்பிட முடியாத அளவிற்கு பல் கூசும்...இப்போ..கூச்சத்துக்கு சான்ஸே இல்லை...
வருடா வருடம் நவம்பர்,டிசம்பர் குளிர்காலங்களில் ஈறு வீங்கி, படுத்தும் பாருங்கள்....நரகத்தை அந்த நாட்களில் அனுபவிக்கலாம்..
இப்போதெல்லாம் அந்த பிரச்னையே இல்லை..கடந்த இரண்டு வருடங்களாக பற்களை பொருத்தவரை ஒரு பிரச்னையுமே வரவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்...
பல்லை விளக்குகிறபொழுது விரலையே உபயோகிப்பதுதான் உன்னதமானது...ஈறுகளின் பலம் இதனால் போனஸாக உறுதி செய்யப்படுகிறது..
இந்தியர்களை அடிமடையர்களாக்கி
"இதுல புதினா இருக்கு",
"இதுல கால்சியம் இருக்கு",
"இதுல ப்ளோரைடு இருக்கு",
"டாக்டர்களின் ஒரே சாய்ஸ்",
"மின்னல் போல பளிச்சிடும்" ..."
ஏயப்பா....கார்ப்பரேட்டுகளின் கண்ணை கவரும் விளம்பரங்களில்
பாவம்...நம்மை வீழத்துகிற சாமர்த்தியம்தான் என்ன..என்ன..??
பேஸ்ட்டுகளை தூக்கி எறியுங்கள்...அருகில் உள்ள சித்த, நாட்டு மருந்து கடைகளில் இந்த பொடிகளை வாங்கி உபயோகப்படுத்துங்கள்....வெறும் 30 ரூபாயில் ஒரு மாதத்திற்கு வரும் அருமையான இந்த பற்பொடி...
திருப்பூரில் ஈசுவரன் கோவில் அருகே புளியஞ்செட்டியார் கடை,
அவிநாசியில் சுமங்கலி சில்க்ஸ் எதிரே திருமுருகன் பூஜா ஸ்டோர்.... இங்கேயும் கிடைக்கிறது.