இயற்கை வேளாண் அங்காடிகள்
இயற்கை வேளாண் அங்காடிகள் பல்கிப்பெருகுவது ஆரோக்கியமான சமுதாயத்திற்கான அறிகுறி...
"விவசாயமே இயற்கையானது" என்பதுபோய் அதை இயற்கை,செயற்கையென பிரியுமாறு செய்தது மனிதன் செய்த பெரிய மடத்தனம்.. விளைவு ....வாயில் வராத, ஞாபகத்தில் வைக்க இயலாத , அந்த யா..இந்த யா ..என நீண்டு தொடரும் புதுப்புது நோய்கள்..
மருத்துவத்தில் மாபெரும் சாதனைகள் இந்த நூற்றாண்டில் ஏற்ப்பட்டது.. என்பதெல்லாம் , நுணுக்கமாய் ஆராய்ந்து பார்த்தால் "சுத்த ஹம்பக் " என்றே சொல்லவேண்டும்.. நோய்களையும் உருவாக்கிவிட்டு, அதை சரிசெய்ய கோடிக்கணக்கான செலவில் ஆராய்ச்சிகளையும் செய்துகொண்டிருப்பதுதான் நவீன அறிவியலின் வளர்ச்சியாக கருதப்படுகிறது போலும்...
இதை புரிந்துகொண்ட மானுடம் மீண்டும் இயற்கையை நோக்கிய பயணத்தை தொடங்கியிருப்பது நவீன மருத்துவ இயலாளர்களுக்கு வருத்தமான செய்தியே...நோய்களின் மூலமே உணவுதானே....உணவே மருந்தாகிவிடுகிறபொழுது , மருத்துவசெலவும், அவசியமற்ற ஆராய்ச்சிகளுக்கான செலவும் தேவையில்லாமல் போகுமே..??
நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் எதுவென்றால் , இயற்கையான உணவுகளை உண்பதே....
விலை சற்றே அதிகமாயிருந்தாலும், இயற்கை அங்காடிகள் சற்றே தொலைவிலிருந்தாலும் , அதை பொருட்படுத்தாமல் வாங்கி பயன்பெற வேண்டியதே நல்ல நுகர்வோரின் கடமை..
ஒருமுறை சந்தையில் காய்கறி வாங்க போனபொழுது , சொத்தை இல்லாத கத்தரிக்காயை தவிர்த்து , பள,பள வென கண்சிமிட்டிக்கொண்டிருந்த கத்தரிக்காயை வாங்க என் கை நீண்டபொழுது, அதை தட்டிவிட்டு நண்பர் சொன்னது இன்னமும் என் ஞாபகத்தில்.... " புழு இல்லாத, பாலிஷ் பண்ணினமாதிரி, ஜிலுஜிலுன்னு தெரியற காய்களெல்லாமே அநேகமா இராசயன உரங்களின் கைங்கர்யத்தால் விளைந்தது....கரடுமுரடாய் , ஒன்றிரண்டு புழு அரிச்ச காய்கறிகள்தான் பெரும்பாலும் இயற்கையாய் விளைந்தது..அதுதான் உடம்புக்கும் நல்லது.. பாத்துவாங்குடா "
இயற்கையே என்றும் இன்பம் தரும்....!!