சாதிகள் ஒழிக

சமுதாய ஓடையினில்
சாதிகள் பெருவெள்ளம்
நற்பணிக்கு நகரயிலே
நாறடிக்குது சுயநல (சாதி)
நாதிகளின் ஆதிக்கம்

கண்ணோடு பேசி
காதல் வளர்க்க சொல்லும்
காவல் பெரும் கூட்டம்
சாதிகள் புரளையிலே
சாவடித்து நிற்குதையா

ஆண்டவன் படைப்பினிலே
ஆணொன்று பெண்ணொன்று
ஆண்ட அரசர்களிலே -சாதிகள்
செய் வேலை பல கொண்டு
தமிழினம் பிரித்து ஆளப்பட்டதையா

பற்றுள்ளவன் ஒரு சாதி
பற்றறவன் ஒரு சாதி
வெள்ளையன் ஆள்கையிலே
வெகுகுண்டு பிரிந்தின்று
ஆயிரம்மாயிறமாய் வளர்த்து நிக்குதையா

சாதிகள் ஓடையில் சாக்கடை அரசியல்
சமரசம் பேசி சாதித்து வெல்லுதிங்கு
சாக்கடை நாற்றம் கூட சாதிகளின் நா
வாசதிடம் தோற்றே போதையா

எழுதியவர் : அருண் (10-Jul-14, 9:35 pm)
Tanglish : saathikal ozhika
பார்வை : 4681

மேலே