துயில் எழாதே

இன்று மட்டும் அதிகாலை துயில் கலையாதே !
-----------------------------------
கவியெழுதி கவியெழுதி களைத்துபோன யெனக்கும் ,
கடும் உழைப்பால் உடல் சோர்ந்து ஔய்ந்துபோன உனக்கும்
ஒருநாள் பொழுதேனும் ஔய்வு வேண்டாமா ?
வந்தது ஞாயிறு ...!
இன்றுமட்டும் அதிகாலை அவசரப்பட்டு
துயில்கலையாதே !
இழுத்து போர்த்திய போர்வையை விலக்காதே !
அன்பாய் மனைவி அத்தான் காப்பி யென்பாள்
ஆசைபட்டு எழுந்துவிடாதே !
அடுத்த ஆயுதமாய் குழந்தையை ஏவிவிடுவாள்
உன்மார்பில் அமர்ந்து அப்பா யென ஆசைகாட்டும்
அன்புக்கு அடிமையாகி இமை திறந்துவிடாதே !
சார் பேப்பர் சத்தம் கேட்க்கட்டும்
சமையலரை சத்தம் செவியை பிளக்கட்டும்
சிலசமயம் தண்ணீர் கூட முகத்தில் தெளிக்கட்டும்
சட்டென கண் திறந்துவிடாதே !
அதிகாலை உறக்கத்தை அனுபவி
மணிபத்தாகட்டும் பகல் பொழுது
பாதிகரையட்டும்
அதன்பின் படுக்கையை தட்டிபோடு 1
உடல் சுறுப்பாகும் உன் உள்ளம் குதுகலிக்கும்
ஞாயிறு நீ வாழி !

எழுதியவர் : (13-Jul-14, 7:33 am)
பார்வை : 69

மேலே