அறியாமை கற்போம்
பிறரைச் சாரா
ஒருவன் உலகில்
பிறப்பதே இல்லை
பின்னும் ஏன்
துறவெனும் தொல்லை ?
-----------------------------------------------
எந்த உயிரினம்
சொந்த இனத்தினில்
பந்த மறுத்திங்கு
உயரம் தொட்டது?!
துயரம் விட்டது?...
-------------------------------------
வாழ்வெனும் தரிசு,
இலவச பரிசு..
விதைப்பது எதுவோ
விளையும் நிச்சயம் !
விரக்தி கைவிடு...
------------------------------------
இறந்தவை மறந்திடு
சிறந்தது நிகழே!
எதிர்வரப் போகும்
புதிரது வீணே!!..
கைத்தளம் அமிர்தம்...
-----------------------------------------------
உள்ளில் மிளிர்வதை
அள்ளி வெளிதரும்
பள்ளிக்கல்வி பொன்னாம் ...
தகவலின் திரட்டு
தகரம் ஒத்தது !!
------------------------------------------------
அனுபவமதுவே அருமருந்தாகும்!
அற்புதமென்பது அறியாமையே!
கற்பெனப் படுவது
களையா திருத்தல்
கற்றவை பற்றவை!!...