வேட்டி அணிவதைக் காப்போம்

*
வேட்டி அணிவது கம்பீரமான
கலாச்சார வாழ்க்கை
தமிழனின் அடையாளம்.
மேட்டிமைக் கிளப்புகளின்
கலாச்சாரத் தாக்குதலைத்
தடுத்து
வேட்டி அணிவதைக் காப்போம்.
தமிழ்மொழியை
இழந்து வருகிறோம்.
இப்பொழுது
வேட்டியை இழக்கப் போகிறோமா?
சட்டம் யார்
கைகளிலிருக்கிறது?
ஏசி அறைகளின் பார்களில்
வேசித்தனப் பொழுதுப் போக்கில்
நேரம் வீணடிக்க வைக்கும்
“ கிளப் ”
உரிமையாளர்களின்
அநீதிக்
குரல்களைக் கண்டிப்போம்…!!
*

எழுதியவர் : ந.க.துறைவன் (14-Jul-14, 9:11 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 128

மேலே