நானும் விளங்கிடப்படாத கைதி

திரைமறைவில் எந்தன்
திரை விளக்கி பார்க்கும்
பல ஆடவர்களுக்கு
ஒரு வேண்டுகோள் !!!

உரிமைக்கொண்டு ஆசைக்கொள்ளும்
கட்டியவளை விட்டுவிட்டு
உரிமையின்றி என்னை
கட்டியணைக்க ஆசைபடும்
ராட்சச புலிகளே
வீட்டிலே ராமர் வேடமிட்டு
வெளிச்சத்தில் அமிர்த வாழ்க்கை
வாழ வழியின்றி
எந்தன் கட்டில் மேட்டிலோ
வீர விருந்தினர் வாழ்க்கை வாழ்வது
நியாயமா ???

பசிக்கொண்ட பூனை
பாலை தேடி அலைந்து
ருசிகொண்டு பருகியதை போல
விலைமாதுவை தீண்டி
விரதத்தை முடித்தீர்கள் !!!

கனிந்த கனிபோல
என்னை யாரும் பரிகசிக்கவில்லை
கனியும் காய்போல
கரடு முரடாய் கையாளுகிறீர்கள் !!!
பசிக்காக இரவில் பிணமாக நடித்தால்தான்
ருசிக்காக வீட்டில்
ஒரு கை சோறு வடிக்கமுடியும் !!!

திருந்தி வாழ நினைக்கிறேன்
என்னை தீண்டியவர்கள்
திரும்பவிட்டதில்லை !!!
எதையும் வாங்க வசதியில்லாததால்
என்னிடம்
விற்பதற்காக இருக்கும்
உடம்பைக்கூட
நாணயமற்றவர்கள்
வாடகைக்கு வந்ததை மறந்து
விலைக்கொண்டு வாங்கியதை போல
நகங்களைக்கொண்டு
கீறி கீறி
உதிரம் கொட்ட கொட்ட
வாய்திறக்க முடியாமல்
நரக வேதனையில்
நரம்புகளை வெடிக்கச்செய்தார்கள் !!!

எந்தன் பெண்மையை
மென்று தின்ற ஆண்வர்க்கவாதிகளே
மனைவியடமாவது மென்மையாக
நடந்துக்கொள்ளுங்கள் !!!
எங்களுக்கு இருப்பது
கனிபோன்ற தேகமே
கருங்கல் தேகமல்ல !!!

வெளியில் சிந்திய வேர்வைக்காக
என்னிடம் உதிரத்தை
உறிஞ்சிக்கொள்ளுகிறீர்கள் !!!
தூறல் சிந்தாத வான் மேகமில்லை
கீறல் படாத வேசி தேகமில்லை !!!

விருந்தினர் மாளிகையே
வேலை செய்யும் இடமானால்
நிர்வாணமே எந்தன்
நிரந்தர உடையானால்
நானும் விளங்கிடப்படாத
கைதிதான் !!!

எழுதியவர் : prabakaran (14-Jul-14, 11:00 am)
பார்வை : 61

மேலே