காதல் விதை

பார்வையால் வேர் பிடித்து
பேசிப்பேசி இலை விட்டு
ஸ்பரிசத்தால் கிளை பரப்பி
நேசித்து
பூஜித்து
யாசித்து
இதயத்தில் மலர்ந்த பூவை
எடுத்து
தொடுத்து
மணமாலை ஆக்கும்முன்பே
காலத்தால்
கொண்ட கோலத்தால்
காரண காரியத்தால்
காயாகி
கனியாகி
விதையான ஒரு விருட்சம்

மீண்டும்!

எழுதியவர் : உடுமலை கேவி சம்பத்குமார் (14-Jul-14, 11:18 am)
சேர்த்தது : க.சம்பத்குமார்
Tanglish : kaadhal vaithai
பார்வை : 657

மேலே