கனா கண்டேன்

இதுநாள் வரை எந்தன் இதயம்,
தனியே துடித்தது!
இப்போ, உன்னை பார்த்ததும்
எந்தன் மனம்,
உன்னை விரும்புது!
இது, ஹார்மோன் செய்த மாயம்!
உன்னிடம் கொண்ட தாகம்!!!

கைகளுக்கு ஜோடி வேண்டும்!
கன்னத்திற்கு தீண்டல் போதும்!
முகங்கள் மாறி,
முத்தமழை பொழிய வேண்டும்!

கால் வலிக்க நடக்க வேண்டும்!
கடற்கரையில் தழுவல் போதும்!
யாரும் அறியா நேரத்திலே,
கொஞ்சம் சில்மிஷம் வேண்டும்!

உன்னை பார்த்த நேரத்தில்,
என்னை மறந்த ஞாபகம்!
கண்கள் மூடி காதல் செய்தால்,
கனவே என்று தோன்றுதே!
கட்டியணைத்து உறங்கினேன்!
தலையணை என்று ஞாபகம்!
முத்தம் கொடுத்து தீர்ந்து போனால்,
குழந்தை என்றே தோன்றுதே!

போதும்! போதும்! கனவே போதும்!
பொங்கிடுதே காதல் ஆசை!
வேண்டும்! வேண்டும்! இன்றே வேண்டும்!
ஆயுள் முழுக்க உந்தன் காதல்!
வெட்கம் என்ன!
காதல் குறிப்பா?
உன்னை கண்டு,
நாணல் கொண்டேன்!
கட்டி அணைக்க கனவும் கண்டேன்!!!

எழுதியவர் : Sherish பிரபு (15-Jul-14, 3:37 pm)
Tanglish : kanaa KANDEN
பார்வை : 201

மேலே