மாலை கவிதை தோட்டம்

இரவோடு பகல் கைகோர்த்து
நின்ற அழகை
மாலை என்றோம் !
கனவோடு உள்ளம் கைகோர்த்து
வந்த எழிலை
கவிதை என்றோம் !
மலரோடு தென்றல் கைகோர்த்து
அசைந்து நிற்கும் அழகை
தோட்டம் என்றோம் !
என்னோடு நீ கைகோர்த்து நடந்து வந்த
அழகை என்னவென்றேன் ?
இவையெல்லாம் என்றாய் நீ !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (15-Jul-14, 4:02 pm)
பார்வை : 577

மேலே