யுத்தம் இல்லாத சப்தம் - நாகூர் லெத்தீப்

கண்ணீர் துளிகள்
தெருவெல்லாம்
ஓடுகிறது உயிரெல்லாம்
மறிக்கிறது.......!

பாலஸ்தீன
குழந்தைகள்
குருதியிலே
நினைகிறது அவலத்தின்
விளிம்பிலே வாழ்கிறது.....!

போர்க்களம்
எதற்கு இந்த
மண்ணிலே
மனிதன் வாழ்கையை
துளைக்கவா.........!

உடல் சிதறி
பலியாகும் உடலை
நீ நேரிலே
கண்டதுண்டா
என்ன கொடுமை.......!

ஓர் இனத்தை
அழிக்கும் அரக்கன்
குண்டுகளை
சுமந்து வானிலே
பறந்து வருகிறானே........!

பிஞ்சு உள்ளங்கள்
அறியுமா அப்பாவி
மக்களுக்கு தெரியுமா
உயிர் போவதை..........!

உடல்கள்
மிதக்கிறது மனித
தாகத்தை தீர்க்கிறது
சகதிலாய்
யுத்தகளத்தில்.........!

உச்சக்கட்ட
பிடிவாதம் முடிவிலே
அழிவுகள்
அதிகமான
பிணக்குவியல்கள்.......!

மத்தியஸ்தம்
செய்ய தயார்
என்கிறது - உலகமே
கண்கட்டி வாய்பொத்தி
வேடிக்கை
பார்க்கிறது.......!

ஏதும் தெரியாத
பிள்ளையா
உலகம் - ஓர் இனத்தை
பலிவாங்குதே
அளிக்க
நினைக்குதே.........!

அமைதி என்ற
ஆயுதத்தை கையில்
எடுத்தால்
போர்க்களம்
இல்லையே
இந்த உலகிலே........!

மனிதனே உனது
இனத்தை நீ அளிப்பது
ஏன் உலகிலே
வாழ்வது ஏன்.......!

இருண்ட வானம்
மீண்டும் இருள்
அடைகிறது குண்டு
மழை நிற்காமல்
பொழிகிறது.......!

நிம்மதி
கிடைக்கட்டும்
யுத்தம் இல்லாத
சப்தம் பெருகட்டும்
உலகிலே.........!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (16-Jul-14, 5:33 pm)
பார்வை : 82

மேலே