நிைனவில்நீதான்

கனவில் விதி எழுதி ,
நினைவில் உணர்வெழுதி,
நீ எங்கோ நான்
எங்கோவென
இருந்த போதும் ,
காற்றினிலே
அன்பெழுதிதூதாய் அனுப்புகிறேன்்
அதைநீ
முத்தமிட்டு நேசிக்கிறாய் !!
தோள் இல்லை -
ஆனாலும் நான்சாய்ந்துகொள்கிறேன் -உன்மடியில்லை -
இருந்தும் நான்துயில் கொள்கிறேன்!!
விண்ணை எட்டிய
நம் நட்பின் உணர்வுகள் இன்றுநட்சத்திரங்களோடு நடுவினில்உலவிக்
கொண்டிருக்க
நானும் உன்
நினைவுகளின் தனிமையில்்
உலாவிக் கொண்டிருக்கிறேன்

எழுதியவர் : சதீஷ் (16-Jul-14, 8:45 pm)
பார்வை : 57

மேலே