காதல் பெயரில் என் மனதை கற்பழித்தவளே 555

பெண்ணே...
எனக்கு நீதான் உனக்கு
நான்தான் என்று சொன்னவளே...
நீயின்றி வாழ்வில்லை
எனக்கு என்றாய்...
உன் பெற்றோர்களுக்கு
பிடிக்கவில்லை என்று...
விலக சொல்கிறாயடி
இன்று...
உன் உறவுகளை கேட்டுகொண்டா
என் மீது நீ காதல் கொண்டாய்...
பதிவு திருமணதிற்கு
மறுகிறாயடி...
நீ காதல் என்னிடம்
சொல்லுமுன்னே...
நான் என்ன சாதி
என்று கேட்டிருக்கலாமே...
என்னுடன் இருந்த உலகம்
இப்போது இல்லையடி...
தனிமையில் நிற்கும்
என்னை...
தலை உயர்த்தி பார்க்க
மறுக்கிறாயடி...
கல்லூரி பயிலும் வரை
இந்த காதலென்று உணர்ந்தேனடி...
உன் ஆசை போலவே
விலகுகிறேன்...
வலியால் உருகும்
இதயத்தோடு...
உன்னிடம் சில வார்த்தைகள்
இறுதியாக...
என் ஆடையை துவைத்தால்
படிந்த கரை போய்விடும்...
நீ காதல் என்னும் பெயரில்
கற்பழித்த என் மனதை...
என் மரணம் வரை தொடரும்
இந்த களங்கத்தை...
நான் எப்படி துடைப்பேன்
சொல்லிவிட்டு செல்லடி.....