சாதிக் கழுகு

ஓர் இலட்சியத்தை நோக்கிப்
பறக்கும் சிட்டுக் குருவி
நான் .......
பறக்கும் சிறகுகள்
சாதிக் கழுகுகளால்
ஒடிக்கப்படுகின்றன ......
என் இலட்சியங்கள் சாதி
எனும் போர்வையால்
மூடப்படுகிறது .......
நான் கீழ் சாதியாம்
இலட்சியங்கள் கூடாதாம் !!
அவன் மேல் சாதியாம்
இலட்சியங்கள் கூடுமாம் !!
நான் ஒன்று கேட்கிறேன் ...
அவன் உடலில் என்ன ?
நீல இரத்தமா ? ஓடுகிறது
பார்த்துச் சொல்லுங்கள்
அப்போது ஏற்கிறேன்
எனக்கு இலட்சியங்கள்
கூடாதென்று .........!!!

எழுதியவர் : fasrina (19-Jul-14, 9:29 pm)
Tanglish : sathik kazhugu
பார்வை : 54

மேலே